3 Days Continue School Leave Happy News
3 Days Continue School Leave Happy News: பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் காலாண்டு விடுமுறை முடிவடைந்தது. அக்டோபர் தொடக்கத்தில் வந்த ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறைகளும் காலாண்டு விடுமுறையுடன் சேர்ந்து வந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அடுத்த விடுமுறை எப்போது வரும் என்று மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பள்ளிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்காகத் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், அடுத்ததாக வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகை விடுமுறையை மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எப்படியும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விடுமுறை:
வரும் அக்டோபர் 18-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை, 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 20-ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி விடுமுறை, அதைத் தொடர்ந்து 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காகத் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அறிவிக்கப்பட்டால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதனால், தீபாவளி பண்டிகை விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்ல மாணவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவது தனி மகிழ்ச்சிதான்.
பட்டாசுகள் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதே சமயம், துணிக்கடைகளும் சலுகைகளை அள்ளி வீச ஆரம்பித்துள்ளன.
தூத்துக்குடி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை
இந்நிலையில், தீபாவளிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 27-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுவதாகத்” தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் 25 சனிக்கிழமை, 26 ஞாயிற்றுக்கிழமை, 27 திங்கட்கிழமை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆனால், அதே சமயம் அத்தியாவசியப் பணிகள் மற்றும் அது சார்ந்த பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.