ரெட் அலர்ட் எச்சரிக்கை.. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?
Red Alert School College Leave Chance Nov 28
Red Alert School College Leave Chance Nov 28: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
நவம்பர் 28, வெள்ளிக்கிழமை (நாளை) மழை எச்சரிக்கை
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
திருவாரூர்
புதுக்கோட்டை
மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம்
சிவகங்கை
திருச்சி
அரியலூர்
மயிலாடுதுறை
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தூத்துக்குடி
விருதுநகர்
மதுரை
பெரம்பலூர்
கடலூர்
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வாய்ப்பு:
ரெட் அலர்ட் மற்றும் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கனமழையின் தீவிரத்தைப் பொறுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியிடுவார்கள்.
நவம்பர் 29, சனிக்கிழமை (நாளை மறுதினம்) மழை எச்சரிக்கை
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
கடலூர்
விழுப்புரம்
செங்கல்பட்டு
மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்:
தஞ்சாவூர்
அரியலூர்
பெரம்பலூர்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
ராணிப்பேட்டை
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
புதுக்கோட்டை
திருச்சி
சேலம்
கிருஷ்ணகிரி
தருமபுரி
திருப்பத்தூர்
கரூர்
நாமக்கல்