தமிழ்நாடு அரசு BDO ஆபீஸில் வேலை வாய்ப்பு!-புதிய நிரந்தர வேலை
TNRD Recruitment 2025 Apply Link
TNRD Recruitment 2025 Apply Link: அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள நிரந்தர அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

📌 முக்கிய வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, அரியலூர் மாவட்டம்
வேலை வகை: தமிழ்நாடு நிரந்தர அரசுப் பணி
பணியிடம்:தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், அரியலூர் மாவட்டம்
பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுனர் (Jeep Driver)
மொத்த காலியிடங்கள்: 01
தேர்வு முறை: நேர்காணல் (எழுத்துத் தேர்வு இல்லை)
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4, 2025 (மாலை 5.45 மணி வரை)
💰 சம்பளம் மற்றும் வயது வரம்பு
சம்பள விவரம் (Basic Pay): மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை.
சலுகைகள்: அடிப்படை சம்பளத்துடன் பிற அரசுப் படிகளும் (Allowances) வழங்கப்படும். முதல் மாத ஊதியம் ₹25,000-க்கும் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது
வயது வரம்பு (17.02.2025 நிலவரப்படி): 18 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும்
🎓 கல்வி மற்றும் பிற தகுதிகள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு மேலான கல்வித் தகுதிகள் (10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஓட்டுநர் உரிமம்: மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் (Valid Driving License) வைத்திருக்க வேண்டும்
அனுபவம்: ஓட்டுநர் பணியில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான அனுபவச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்
📝 விண்ணப்பிக்கும் முறை
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், ஆஃப்லைன் (Offline) முறையில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்துக் காலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ₹50/- கட்டணத்தை “Commissioner, Panchayat Union, T. Palur” என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft – DD) எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்
ஆவணங்கள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
கல்வித் தகுதிச் சான்றுகள், ஜாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும்
நேர்காணல் அழைப்புக்காக, 10 இன்ச் x 4 இன்ச் அளவுள்ள அஞ்சல் உறையில் உங்களது முழு முகவரியை எழுதி, அத்துடன் அஞ்சல் தலை ஒட்டி (Postal Stamp), விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தா. பலூர், அரியலூர் மாவட்டம், பின்கோடு 612904
குறிப்பு: விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான இடம் மற்றும் தேதி குறித்த தகவல் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் நேர்காணலுக்குச் செல்பவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
| Official Website Link | CLICK HERE |
| Notification Link | CLICK HERE |
| Apply Link | CLICK HERE |