அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Vadapalani Andavar Kovil Recruitment 2025
Vadapalani Andavar Kovil Recruitment 2025: சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (HR&CE)
பணியிடம்: அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், வடபழனி, சென்னை.
பணியிடங்களின் எண்ணிக்கை: 02 (எழுத்தர்: 01, காவலர்: 01)
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
சமயம்: இந்து மதத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்
பதவி 1: எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி 2: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
முக்கிய விவரங்கள்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப தேதி மற்றும் முகவரி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026 (மாலை 5.45 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளமான **https://hrce.tn.gov.in/**-ல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.
Vadapalani Andavar Kovil Recruitment 2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here விண்ணப்ப படிவம் Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here