Thirumalai token illai Sorga Vaasal Darisanam
திருமலையில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு சிறப்பு அறிவிப்பு
Vaikunta Ekadasi Munittu Thirumalaiyil Sirappu Earpadugal
திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில், வரும் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
January 2 Mudhal Token Illamal Darisanam
இதில் குறிப்பாக ஜனவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, எந்தவித தரிசன டோக்கன்களும் இல்லாமலேயே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.

TTD Earpadugal Kurithu PR Naidu Vilakkam
நேற்று காலை, திருமலையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியான பிஏசி-2-ஐ பிஆர் நாயுடு நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது முடி காணிக்கை செலுத்தும் இடங்கள், லாக்கர் வசதிகள், அன்னபிரசாதம் வழங்கும் மையம் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, பக்தர்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் நிறைகளை கேட்டறிந்தார்.
Bhakthargalukku Annadanam, Pathukappu Sirappu
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த 10 நாட்களில் பாதுகாப்பு, அன்னதானம், தரிசன வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல் மூன்று நாட்களான டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி முதல் எந்த டோக்கன்களும் இல்லாமல் சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டு சிறப்பான முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.