தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!- 46 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!
DHS Recruitment 2025 Kancheepuram
DHS Recruitment 2025 Kancheepuram: காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள 46 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் டிசம்பர் 25, 2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய விவரங்கள்:
நிர்வாகம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS), காஞ்சிபுரம்.
மொத்த காலியிடங்கள்: 46
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை (ஒப்பந்த அடிப்படை).
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2025
தேர்வு முறை: நேர்காணல் (Interview).
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:
1. Auxiliary Nurse Midwife (ANM)
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட ANM படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ₹14,000
2. Manifold Technician
காலியிடங்கள்: 15
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் Anaesthesia Technician சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ₹15,000
3. ECG Technician
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருட ECG அல்லது Treadmill Technician சான்றிதழ் படிப்பு.
சம்பளம்: ₹15,000
4. CSSD Tech. Assistant (Sterilization Operator)
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: Diploma in Hospital Sterilisation Technology.
சம்பளம்: ₹15,000
5. Nursing Assistant (Male/Female)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MPHW அல்லது Nursing Assistant பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ₹12,000
6. Cook & Dhobi
காலியிடங்கள்: 03 (Cook-1, Dhobi-2)
கல்வித்தகுதி: தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ₹12,000
7. இதர தொழில்நுட்ப பணியிடங்கள் (Dietician, Radiographer, Therapist, Mechanic etc.)
இவற்றுக்கு அந்தந்த துறை சார்ந்த பட்டயப்படிப்பு (Diploma) அல்லது முதுகலை பட்டம் (Post Graduate) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ₹15,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kancheepuram.nic.in/ என்ற பக்கத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 25.12.2025 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பு: இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://kancheepuram.nic.in/
அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்: இணையதளத்தின் ‘Recruitment’ பகுதியில் சரிபார்க்கவும்.