தமிழகத்தில் ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு வங்கியில் தங்கம் விற்பனை!!- குறித்து முக்கிய தகவல்! Ration Shop Gold Sales New Request Latest News 2026

தமிழகத்தில் ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு வங்கியில் தங்கம் விற்பனை!!- குறித்து முக்கிய தகவல்!

Ration Shop Gold Sales New Request Latest News 2026

Ration Shop Gold Sales New Request Latest News 2026: சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Ration Shop Gold Sales New Request Latest News 2026

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

கோரிக்கையின் பின்னணி

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏழை எளியோர் மற்றும் நடுத்தர மக்கள் நல சங்கத்தின் தலைவர் லிங்கபெருமாள் இந்த முக்கிய மனுவை அளித்துள்ளார்.

தற்போதைய சந்தை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் தங்களது வீட்டு விசேஷங்களுக்கு ஆபரணங்களை வாங்குவது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • மலிவு விலை விற்பனை: தனியார் நகைக்கடைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான சேதாரம் மற்றும் கூலி இல்லாமல், அரசு நேரடியாக நகைகளை விற்பனை செய்ய வேண்டும்.

  • நம்பகத்தன்மை: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் நகையின் தரம் மற்றும் தூய்மை உறுதி செய்யப்படும்.

  • பயனாளிகள்: இந்த திட்டத்தின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கிராமப்புற மக்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

இந்த “நூதன கோரிக்கை” தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது போல, எளிய மக்களும் தங்கம் வாங்கும் வகையில் அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Comment