தமிழக அரசு வேலை 2026- தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் உடனே விண்ணப்பிங்க!
TNHRCE Recruitment 2026 Chennai
TNHRCE Recruitment 2026 Chennai; சென்னை தங்கசாலை தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய விவரங்கள்:
நிறுவனம்: இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணி வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 08
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2026 (மாலை 5:45 மணி வரை)
பதவி வாரியான காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:
| பதவி | காலியிடம் | கல்வித் தகுதி | மாதச் சம்பளம் (ரூ.) |
| சரக்கரை காப்பாளர் | 01 | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி | 13,200 – 41,800 |
| அலுவலக உதவியாளர் | 01 | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி | 12,600 – 39,900 |
| ஓதுவார் | 01 | தேவாரப்பள்ளியில் 3 ஆண்டு சான்றிதழ் | 12,600 – 39,900 |
| சுயம்பாகி | 01 | நைவேத்தியம் & பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 13,200 – 41,800 |
| தோட்ட பராமரிப்பாளர் | 04 | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 11,600 – 36,800 |
| இரவு காவலர் | 01 | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 11,600 – 36,800 |
| கால்நடை பராமரிப்பாளர் | 01 | தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் | 11,600 – 36,800 |
| ஸ்ரீபாதம் தாங்கி | 01 | தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் + 2 வருட அனுபவம் | 10,000 – 31,500 |
வயது வரம்பு மற்றும் தேர்வு முறை:
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எவ்வித கட்டணமும் இல்லை (இலவசம்).
தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
படிவம் பதிவிறக்கம்: hrce.tn.gov.in இணையதளத்தில் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
பூர்த்தி செய்தல்: விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பிழையின்றி பூர்த்தி செய்து, புகைப்படத்தை ஒட்டவும்.
இணைப்புகள்: தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: > செயல் அலுவலர்,
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
எண். 315, தங்கசாலை தெரு, சென்னை – 600003.
குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2026 அன்று மாலை 5:45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்: இங்கே கிளிக் செய்யவும்
இணையதளம்: hrce.tn.gov.in