கலைஞர் கனவு இல்ல திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?- யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? Kalaignar Kanavu Illa Thittam 2026 How To Apply

கலைஞர் கனவு இல்ல திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?- யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Kalaignar Kanavu Illa Thittam 2026 How To Apply

Kalaignar Kanavu Illa Thittam 2026 How To Apply : தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றும் கனவோடு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் கலைஞரின் கனவு இல்ல திட்டம் தமிழ்நாட்டில் புது வீடு கட்ட திட்டமிடுபவர்களுக்கு ஒரு சூப்பரான அரிய குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

Kalaignar Kanavu Illa Thittam 2026 How To Apply

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் மு. க. ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு லட்சம் வீடுகள் இந்த ஆண்டு கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

எனவே பொதுமீடு கட்டும் திட்டத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை குறித்து அனைத்து விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கலைஞரின் கனவு இல்ல திட்டம்
குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2024 25 ஆம் நிதி ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மாநில அரசால் நடத்தப்பட்டுள்ள கலைஞர் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு, புதிய குடிசைகள் கணக்கெடுப்பு மற்றும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு ஆகியவற்றில் இடம்பெற்று தொடர்ந்து குடிசை வீட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த திட்டத்தில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும் சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் வீடு கட்ட முடியும்.

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் இணைய சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள் குடிசையில் ஒரு பகுதி காண்கிரீட் ஓடு ஹாஸ்பிடல் சீட்டு இருந்தாலும் தகுதி பெற முடியாது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அடங்கிய குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு கட்டும் தொகையாக 3,50,000 வரை செலவு செய்யப்படுகிறது மேலும் மூன்று நிலைகளில் ஒற்றைச் சார்ந்த கணக்கு மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகையானது வரவு வைக்கப்படுகிறது.

ஏற்கனவே அரசால் மேற்கொள்ளப்பட்ட மூன்று வகைக் கணக்கெடுப்பிலும் விடுபட்ட குடிசையில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அவர்களது விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் கிராம சபையின் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆண்டில் விண்ணப்பதாரர் வசிக்கும் மாவட்டத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Comment