வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு- விநியோகம் தடைப்படும் அபாயம்!- தற்போதைய நிலை என்ன?
LPG Cylinder Latest News March 10
LPG Cylinder Latest News March 10: பல இடங்களில் சிலிண்டர் விநியோகத்தையே மக்கள் நம்பி இருப்பதால், விநியோகச் சங்கிலியில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது உடனடியாக தட்டுப்பாடாக மாறும் நிலை உள்ளது.
1/6

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்த எண்ணிக்கை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
advertisement
2/6

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வீடுகளுக்கு சுமார் 2.27 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளன. அதாவது, மாநிலத்தின் மொத்தத் தேவையை விட சுமார் 7 லட்சம் இணைப்புகள் கூடுதலாக உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
advertisement
3/6

ஆண்டுக்கு ஒரு வீட்டிற்கு சராசரியாக 6 சிலிண்டர்கள் என கணக்கிட்டால், தமிழகத்தில் ஆண்டுக்கு 13.6 கோடி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு மட்டும் சுமார் 3.7 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
advertisement
4/6

ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் தேவை நாள் ஒன்றுக்கு 30,000 முதல் 40,000 வரை உள்ளது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வீட்டு உபயோக சிலிண்டர்களும், 6,000 முதல் 8,000 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகின்றன.
advertisement
5/6

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 1600 விநியோக முகவர்கள் மூலம் இந்த சிலிண்டர்கள் நுகர்வோரிடம் சென்றடைகின்றன.
advertisement
6/6

குழாய் வழி எரிவாயுத் திட்டத்திற்கு பதிலாக பல இடங்களில் சிலிண்டர் விநியோகத்தையே மக்கள் நம்பி இருப்பதால், விநியோகச் சங்கிலியில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது உடனடியாக தட்டுப்பாடாக மாறும் நிலை உள்ளது.
