சிலிண்டர் விலை ரூ.200 உயர வாய்ப்பு?- வெளியான அதிர்ச்சி தகவல்!!
LPG Rate Likely Riced 200 Rupees Predicted Anand Srinivasan
LPG Rate Likely Riced 200 Rupees Predicted Anand Srinivasan: தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து இன்று மதியத்திற்குள் தகவல் தெரிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்
இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் 200 ரூபாய் வரை உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். மேலும், வணிக சிலிண்டர் விலையும் ரூ.300 முதல் ரூ.400 வரை உயர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, விலைவாசி உயர்வை தவிர்க்க முடியாது என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.