இந்திய ரயில்வேயில் 368 பிரிவு கட்டுப்பாட்டாளர் பணி!-உடனடியாக விண்ணப்பிங்க!
RRB Recruitment 2025 Section Controller
RRB Recruitment 2025 Section Controller: இந்திய ரயில்வேயில் 368 பிரிவு கட்டுப்பாட்டாளர் (Section Controller) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ளன.

முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
- பணியின் பெயர்: பிரிவு கட்டுப்பாட்டாளர் (Section Controller)
- மொத்த காலியிடங்கள்: 368
- சம்பளம்: ரூ. 35,400
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 20 முதல் 33 வயது வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST, OBC, PwBD) அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
- விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கையர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (EBC) – ரூ. 250. கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) கலந்து கொண்டால் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
- மற்ற பிரிவினர் – ரூ. 500. கணினி அடிப்படையிலான தேர்வில் கலந்து கொண்டால் ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
தேர்வு முறை மூன்று கட்டங்களைக் கொண்டது:
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT): இது முதல் கட்டத் தேர்வாகும்.
- மருத்துவப் பரிசோதனை (ME): தேர்வில் தகுதி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- ஆவணச் சரிபார்ப்பு (DV): இறுதியாக, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: செப்டம்பர் 15, 2025.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14, 2025.
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here