TET:ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு! TET Applicant Do Not Need Barrier Free Certificate

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

TET Applicant Do Not Need Barrier Free Certificate

TET Applicant Do Not Need Barrier Free Certificate: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுத விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், தங்கள் துறைசார்ந்த தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டியதில்லை என பள்ளிக் கல்வித் துறை முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

TET Applicant Do Not Need Barrier Free Certificate

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்தத் தகவல், ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்வின் முக்கியத்துவம்

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE), 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதியை நிர்ணயிக்கும் வகையில் TET தேர்வை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களின் நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டிலும் 2012 முதல் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், உச்ச நீதிமன்றம் ஆசிரியர் பணிக்கு TET தேர்வு அவசியம் எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.

விண்ணப்பித்தோர் விவரங்கள்

இந்த ஆண்டு TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 4,80,123 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

முதல் தாள் தேர்வு நவம்பர் 15 ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தடையில்லாச் சான்றிதழ் குறித்த அறிவிப்பு

பொதுவாக, அரசுப் பணியில் உள்ளவர்கள் வேறு பணி அல்லது உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும்போது, தங்கள் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது வழக்கம்.

இதன்படி, TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் சான்றிதழுக்காக விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர்கள் TET தேர்வெழுத தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment