TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced
TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced

கிராம உதவியாளர் தேர்வு திடீர் ஒத்திவைப்பு!-அதிர்ச்சி அறிவிப்பு! TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced

கிராம உதவியாளர் தேர்வு திடீர் ஒத்திவைப்பு!-அதிர்ச்சி அறிவிப்பு!

TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced

TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced: தமிழகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் பணிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

TN Village Assistant Exam Postponement 2025 Collector Announced

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

தமிழக அரசு வருவாய்த் துறையின் கீழ் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. மாவட்ட வாரியாக இதற்கான எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நடந்து வந்தன.

ஒத்திவைப்பிற்கான காரணம் என்ன?

தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பில் தமிழக அரசு தளர்வு அளித்ததுதான்.

  • புதிய அரசாணை: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அனைத்துப் பிரிவினருக்கும் கூடுதலாக 2 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • மாற்றியமைக்கப்பட்ட வயது வரம்பு:
    • பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும்,
    • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு 39 ஆகவும்,
    • பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு மாற்றத்தால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், புதிய வயது வரம்புக்குள் வரும் தகுதியுடையவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதனால், புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, திருத்தப்பட்ட நடைமுறைகளின்படி தேர்வு மீண்டும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், நிர்வாக காரணங்களால் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *