சொந்த ஊரில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு-கல்வித் தகுதி: 10th Tamilnadu Rural Development Department Job Apply Details Check Now

சொந்த ஊரில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு-கல்வித் தகுதி: 10th

Tamilnadu Rural Development Department Job Apply Details Check Now

Tamilnadu Rural Development Department Job Apply Details Check Now: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 365 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் செப்டம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Tamilnadu Rural Development Department Job Apply Details Check Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்

இந்த அறிவிப்பில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுக் காவலர், மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் அடங்கும்.

  • பதிவறை எழுத்தர்:
    • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
    • சம்பளம்: ரூ. 15,900 – 58,500.
  • அலுவலக உதவியாளர்:
    • கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
    • சம்பளம்: ரூ. 15,700 – 58,100.
  • ஈப்பு ஓட்டுநர்:
    • கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
    • சம்பளம்: ரூ. 19,500 – 71,900.
  • இரவுக் காவலர்:
    • கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
    • சம்பளம்: ரூ. 15,700 – 58,100.

மாவட்ட வாரியான காலியிடங்கள்

மொத்தம் 365 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நிரப்பப்பட உள்ளன.

மாவட்டம்காலியிடங்கள்மாவட்டம்காலியிடங்கள்
அரியலூர்7நாமக்கல்7
செங்கல்பட்டு6நீலகிரி3
கோயம்புத்தூர்12பெரம்பலூர்2
கடலூர்7புதுக்கோட்டை7
தருமபுரி7ராமநாதபுரம்5
திண்டுக்கல்7ராணிப்பேட்டை12
ஈரோடு16சேலம்19
கள்ளக்குறிச்சி13சிவகங்கை14
காஞ்சிபுரம்5தென்காசி12
கன்னியாகுமரி6தஞ்சாவூர்4
கரூர்10தேனி7
கிருஷ்ணகிரி9திருப்பத்தூர்15
மதுரை9திருவாரூர்5
நாகப்பட்டினம்5திருநெல்வேலி6
தூத்துக்குடி3திருப்பூர்21
திருவள்ளூர்22திருவண்ணாமலை23
திருச்சி15வேலூர்11
விழுப்புரம்24விருதுநகர்12

முக்கிய தகவல்கள்

  • வயது வரம்பு: 01.07.2025 அன்று 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
  • தேர்வு முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:
    1. https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.
    2. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025.

கூடுதல் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

Leave a Comment