TNPSC Group 4 Exam Results Cut Off Marks New Update 2025
TNPSC Group 4 Exam Results Cut Off Marks New Update 2025 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டுக்கான தேர்வு சற்று கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண் குறையுமா அல்லது கூடுமா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு 11.48 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். சுமார் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இந்தத் தேர்வு நடைபெற்றது. அதாவது, ஒரு பணியிடத்திற்கு சுமார் 287 பேர் போட்டியிடுகிறார்கள்.
)
இதில் வெற்றி பெறுபவர்களின் விகிதம் தோராயமாக 0.35% ஆகும். அதாவது, 1,000 பேரில் சுமார் 3.5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த ஆண்டு தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக பல தேர்வர்களும், பயிற்சி மையங்களும் தெரிவித்துள்ளன.

பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து பல சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது கட் ஆஃப் மதிப்பெண்ணை பாதிக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.
குரூப் 4 தேர்வில் அதிர்ஷ்டத்தின் பங்கு
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் குணால் மங்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு (Luck) குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
அவரது ஆய்வின்படி, குரூப் 4 தேர்வுகளில் மதிப்பெண் வேறுபாடுகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு எப்போதும் இருந்து வருகிறது.

- 2013 குரூப் 4 தேர்வில், மதிப்பெண் வேறுபாடுகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு 12% ஆக இருந்தது.
- 2017ல் இது 9.5% ஆகவும், 2019ல் 7% ஆகவும் குறைந்தது.
அதிர்ஷ்டம் எல்லா தேர்வர்களுக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. நன்கு தயாராகி, அதிக மதிப்பெண்கள் (உதாரணமாக, 160-170க்கு மேல்) வாங்கும் தேர்வர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
உதாரணமாக, 2019 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற (95-வது சதவீதத்தில்) தேர்வர்களிடையே இருந்த மதிப்பெண் வேறுபாடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தினால் ஏற்பட்டவை என்று ஆய்வு கூறுகிறது. ஆனால், குறைந்த அல்லது சராசரி மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் பங்கு பூஜ்யமாக உள்ளது.
எனவே, இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் நீங்கள் 160 முதல் 170 வரை மதிப்பெண்கள் பெற்றிருந்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிர்ஷ்டம் தீர்மானிக்கக்கூடும். இருப்பினும், குறைந்த முயற்சியுடன் தேர்வு எழுதியவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க வாய்ப்பில்லை.
சுமார் 10,000 முதல் 20,000 தேர்வர்கள் மட்டுமே அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.