இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! – மாதச் சம்பளம் ரூ.25,000 உடனே விண்ணப்பிங்க!
Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now
Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 3 பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2025.
தேர்வு முறை நேர்முகத் தேர்வு ஆகும்.
தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் மாதச் சம்பளமாக ₹25,000 வழங்கப்படும்.
பதவிகள் மற்றும் தகுதிகள்:
- தேவார ஆசிரியர்: 3 ஆண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- இசை ஆசிரியர்: குரலிசையில் 3 வருட பட்டயப்படிப்பு அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- தமிழ் ஆசிரியர்: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A. Tamil) மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.) முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/136/document_1.pdf) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 600026 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 30.09.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.