அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்… தீபாவளி சிறப்பு தொகுப்பு
All Ration Card Holders Have Diwali Sirappu Thogupu Sep 28
All Ration Card Holders Have Diwali Sirappu Thogupu Sep 28: புதுச்சேரி மாநில அரசு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பு ஒன்றை வழங்கவுள்ளதாக செப்டம்பர் 26 அன்று அறிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு தொகுப்பு விவரங்கள்
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் வகையில் வழங்கப்படும் இந்தத் தொகுப்பில் உள்ள ஐந்து பொருட்கள் பின்வருமாறு:
- சர்க்கரை: 2 கிலோ
- சமையல் எண்ணெய்: 2 லிட்டர்
- கடலைப்பருப்பு: 1 கிலோ
- ரவா (ரவை): 500 கிராம்
- மைதா: 500 கிராம்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரியைப் போலவே தமிழ்நாடு அரசும் அடுத்த சில நாட்களில் தீபாவளி சிறப்பு தொகுப்பை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு, தமிழ்நாடு அரசு ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பை கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
