தமிழ்நாடு பொங்கல் பரிசு 2026: ரேஷன் அட்டை இல்லாதவர்களும் பெறுவது எப்படி?
How to Get Pongal Gift 2026 Without Ration Card
How to Get Pongal Gift 2026 Without Ration Card: தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு இரண்டு விதமான பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குகிறது.

1. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பரிசு (அரசு மானியம்)
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறது.
2. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கான சிறப்புப் பொங்கல் தொகுப்பு (பணம் கொடுத்து வாங்குவது)
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு இல்லையே என்று வருத்தப்படத் தேவையில்லை. அவர்களுக்காகக் கூட்டுறவுத் துறை மூலம் ஒரு சிறப்புப் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
3. சிறப்புப் பொங்கல் தொகுப்பு எங்கு கிடைக்கும்?
இந்தச் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பானது, யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் வகையில், பின்வரும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும்:
- கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள்
- பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள்
- கூட்டுறவு விற்பனைச் சங்கம்
- சுயசேவைப் பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள்
விரைவில் இந்த ஆண்டுக்கான சிறப்புப் பொங்கல் தொகுப்பு விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.