தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு!
Diwali Holidays School Students Safety Measures
Diwali Holidays School Students Safety Measures : தீபாவளி விடுமுறையைக் கவனமாகக் கொண்டாடும் வகையில், பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள்:
- கூட்டமான தெருக்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- பெற்றோரின் முன்னிலையில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- மூடிய பெட்டிகள், பாட்டில்கள் ஆகியவற்றில் பட்டாசை வைத்து வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- குடிசைகள் மற்றும் தற்காலிகக் கூரைகள் அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- மருத்துவமனைகள் (ஹாஸ்பிடல்) அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும்.
மாணவர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.