வாட்ஸ்அப் மூலம் ஆதார் கார்டை டவுன்லோட் செய்யும் முறை!-முழு விவரம் இதோ!
Aadhar Card Download in Whatsapp Procedure Tamil Sep 22
Aadhar Card Download in Whatsapp Procedure Tamil Sep 22: ஆதார் அட்டையை டிஜிட்டல் வடிவில் டவுன்லோட் செய்ய, அரசாங்கத்தின் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. இது டிஜிலாக்கர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் UIDAI இணையதளத்தில் லாக்-இன் செய்யாமல் ஆதார் அட்டையை பிடிஎஃப் வடிவத்தில் பெற முடியும்.

Aadhar Card Download in Whatsapp
- MyGov ஹெல்ப் டெஸ்க்’ எண்ணான +91-9013151515 ஐ உங்கள் மொபைல் போன் கான்டாக்ட்டில் சேமிக்கவும்.
- வாட்ஸ்அப் திறந்து, சேமித்த எண்ணுக்கு ஒரு மெசேஜ் அனுப்பவும்.
- சாட்பாட் பதிலளித்தவுடன், ‘டிஜிலாக்கர்’ சேவையைத் தேர்வு செய்யவும்.
- உங்களுக்கு ‘டிஜிலாக்கர்’ கணக்கு இல்லையென்றால், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி டிஜிலாக்கர் தளத்திலோ அல்லது செயலியிலோ ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும்.
- மீண்டும் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட்டிற்கு வந்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி (OTP) வரும்.
- அந்த ஓடிபி-ஐ உள்ளீடு செய்தால், டிஜிலாக்கரில் இருக்கும் உங்கள் அரசு அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் காண்பிக்கப்படும்.
- அதில், ஆதார் அட்டையைத் தேர்வு செய்தால், அது பிடிஎஃப் வடிவத்தில் உங்கள் வாட்ஸ்அப்பிலேயே கிடைக்கும்.
இந்த வசதியைப் பயன்படுத்தி, ஆதார் அட்டை தேவைப்படும்போது மிக எளிதாகவும் வேகமாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.