தமிழக அரசின் மாதம் ரூ.2000 வழங்கும் சூப்பர் திட்டம்!-விண்ணப்பிக்கும் முழு விவரம்! Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

தமிழக அரசின் மாதம் ரூ.2000 வழங்கும் சூப்பர் திட்டம்!-விண்ணப்பிக்கும் முழு விவரம்!

Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now: ஆதரவற்ற குழந்தைகளுக்காகத் தமிழக அரசு “அன்புக்கரங்கள்” என்ற புதிய நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரை பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து படிக்க, மாதம் ரூ.2000 வழங்கப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 15, 2025 அன்று தொடங்கப்பட்டது.

Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

யார் விண்ணப்பிக்கலாம்?

  • இரு பெற்றோர்களையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகள்.
  • பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் குழந்தையைக் கைவிட்டிருந்தால்.
  • பெற்றோரில் ஒருவர் சிறையில் இருந்து, மற்றொருவர் இறந்திருந்தால்.
  • பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்.

எப்படி விண்ணப்பிப்பது?

இத்திட்டத்திற்கு என தனியான விண்ணப்பப் படிவம் எதுவும் இல்லை. மாவட்ட ஆட்சியரிடம் அல்லது மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் நேரடியாக மனு அளிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம்.

Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

  • ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில், ரூ.5 மதிப்புள்ள ஸ்டாம்ப் ஒட்டி கருணை மனுவைச் சமர்ப்பிக்கலாம்.
  • மனுவை பெற்றோரில் ஒருவர் மட்டும் கொடுத்தால் போதும். மாணவர்கள், ஆசிரியர்கள் அல்லது வேறு யாரும் உடன் வரத் தேவையில்லை.

தேவைப்படும் ஆவணங்கள்

விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்:

  • பெற்றோரின் ஆவணங்கள்:
    • தந்தை அல்லது தாய் இறப்புச் சான்றிதழ்
    • ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை
    • வருமானச் சான்று: கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.40,000 முதல் ரூ.70,000 வரையிலும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.72,000 முதல் ரூ.96,000 வரையிலும் வருமானம் இருப்பதற்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். (இந்தச் சான்று ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்).
    • சாதிச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்.
  • குழந்தையின் ஆவணங்கள்:
    • ஆதார் கார்டு
    • பள்ளிப் படிப்புச் சான்றிதழ்
    • பிறப்புச் சான்றிதழ்

கவனிக்க வேண்டியவை

  • விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, கள ஆய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படும்.

Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

  • மனு அளித்த 30 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் இருந்து மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் வரவில்லை என்றால், நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று மனுவின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கடிதம் வந்தால் மட்டுமே உதவித்தொகை கிடைப்பது உறுதியாகும்.
  • இந்தத் திட்டம் கல்லூரி மாணவர்களுக்குப் பொருந்தாது.

Leave a Comment