அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- 618 காலிப்பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!
Anganwadi Recruitment 2025 Vacancy 618
Anganwadi Recruitment 2025 Vacancy 618: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ், சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் 618 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மதிப்பூதியத்தின் (Honararium) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.

கல்வி மற்றும் இதர தகுதிகள்
- கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கக் கூடியவர்கள்: பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இருப்பிடம்: புதுச்சேரியைச் சேர்ந்தவராகவும், அங்கன்வாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் (இதற்கான குடியிருப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்).
வயது வரம்பு
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 35 வயது
- (வயது வரம்பு ஆகஸ்ட் 31-ம் தேதி, 2025-ஐ அடிப்படையாகக் கொண்டது)
தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது.
- 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- அங்கன்வாடிக்கு அருகில் வசிப்பவர்களுக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு மெரிட் அடிப்படையில் வெளியிடும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- இணையதளம்: https://wcd.py.gov.in/
- நேரடி விண்ணப்பப் படிவம் (Google Form): https://forms.gle/uu6rwytW8rpYGgkL7
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை.