Chennai Samuga Nalthurai Job Notification 2025
Chennai Samuga Nalthurai Job Notification 2025: சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் உதவி மையத்தில் மொத்தம் 20 தற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிட விவரங்கள்
திட்ட ஒருங்கிணைப்பாளர் (1 காலியிடம்):
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித பொது உரிமைகள் நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வளம் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
சம்பளம்: ரூ. 28,000.
மேற்பார்வையாளர் (8 காலியிடங்கள்):
கல்வித் தகுதி: சமூகப்பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளநிலை பட்டம்.
சம்பளம்: ரூ. 21,000.
ஆற்றுப்படுத்துநர் (1 காலியிடம்):
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ உளவியல்/ பொது சுகாதாரம் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் மற்றும் ஒரு ஆண்டு பணி அனுபவம்.
சம்பளம்: ரூ. 23,000.
வழக்குப் பணியாளர் (10 காலியிடங்கள்):
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: ரூ. 18,000.
பொதுத் தகுதி: அனைத்துப் பதவிகளுக்கும் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நடைமுறை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2025.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண் – 1, புதுத்தெரு, வணிக வளாகம், GCC முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016.