தமிழ்நாடு அரசு வெளியிட்ட உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடம்- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!
District Child Protection Department Recruitment 2025 Tirupathur
District Child Protection Department Recruitment 2025 Tirupathur: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
- பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 01
- பணியிடம்: திருப்பத்தூர், தமிழ்நாடு
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2025
பணியிடத்தின் விவரம்
- பதவி: Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)
- சம்பளம்: ரூ. 13,240/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினிப் படிப்பில் டிப்ளமோ சான்றிதழ். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் சுருக்கெழுத்தில் உயர்நிலை (Higher Grade) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை https://tirupathur.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5வது தளம், B.பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் மாவட்டம் – 635601.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |