தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!
Diwali Holidays 2025 Full Details
Diwali Holidays 2025 Full Details : ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொது விடுமுறை நாட்கள் வார இறுதி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்ததால், பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில், அடுத்ததாக வரும் தீபாவளிப் பண்டிகையை பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த பண்டிகைக்கு எத்தனை நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இப்போதே தொடங்கிவிட்டது.
தீபாவளிப் பண்டிகை மற்றும் விடுமுறை வாய்ப்புகள்
இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20, திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தமிழகத்தில் தீபாவளி அன்று மட்டுமே அரசு விடுமுறை அளிக்கப்படும்.
தீபாவளி திங்கட்கிழமை வருவதால், அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து இயல்பாகவே மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது.
மூன்று நாட்கள் விடுமுறையுடன், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டால், மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக அமையும். இது சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
தீபாவளிக்கு மறுநாள், அதாவது அக்டோபர் 21-ம் தேதி, நோன்பு கடைப்பிடிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் கருதி, அந்த ஒரு நாளுக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டுதோறும் எழுந்து வருகிறது.இந்த ஆண்டு, இந்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் 21-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கும் பட்சத்தில், பள்ளி மாணவர்களுக்கு கீழ்க்கண்டவாறு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது:
- அக்டோபர் 18: சனிக்கிழமை (வார விடுமுறை)
- அக்டோபர் 19: ஞாயிற்றுக்கிழமை (வார விடுமுறை)
- அக்டோபர் 20: திங்கட்கிழமை (தீபாவளி)
- அக்டோபர் 21: செவ்வாய்க்கிழமை (அரசு விடுமுறை அறிவித்தால்)
கடந்த காலங்களில், பண்டிகைக் காலங்களில் மக்களின் வசதிக்காக, தீபாவளிக்கு அடுத்த நாளை விடுமுறையாக அறிவித்து, அதற்குப் பதிலாக வேறு ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது மாணவர்கள் மத்தியில் இப்போதே தீபாவளி கொண்டாட்டத்திற்கான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தமிழக அரசின் சார்பில் விடுமுறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.