தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் குரு பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு ஜாக்பாட், அனைத்திலும் வெற்றி!
Guru Peyarchi Palangal 2 Days Before Diwali
Guru Peyarchi Palangal 2 Days Before Diwali: இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தேவர்களின் குருவான குரு பகவான் ராசியை மாற்றப் போகிறார். தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் குரு பகவான், தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் 12 மாதங்கள் இருப்பார். அந்த வகையில் தற்போது நடக்கப் போகும் குரு பெயர்ச்சி 12 ஆண்டுகுளுக்கு பின் கடக ராசியில் நடக்கப் போகிறது.
இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

குரு பெயர்ச்சியால் வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தீபாவளிக்கு முன் நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்லும் ஆசை நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சம்பள உயர்வுடன் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ! தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்கவும்