புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்கும் தகுதி என்ன?- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!
How To Apply Puthumai Pen Thittam Scheme 2025
புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முக்கிய தகுதிகள் பின்வருமாறு:
- How To Apply Puthumai Pen Thittam Scheme 2025 கல்வித் தகுதி: 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
- உயர் கல்வி: உயர்கல்வி, டிப்ளமோ அல்லது ஐடிஐ படிப்பு பயிலும் மாணவிகளாக இருக்க வேண்டும்.
- கல்லூரி சேர்க்கை: கல்லூரியில் முதன்முறையாக சேரும் மாணவிகளுக்கும், ஏற்கனவே படிக்கும் மாணவிகளுக்கும் இது பொருந்தும்.
- உதவித்தொகை: இளங்கலை படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
- வங்கி கணக்கு: வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
- அஞ்சல்வழி கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
- ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
- மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
- திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- புதுமைப்பெண் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து மேலும் விவரங்களை, அந்தந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.