தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!- 13,217 காலிப்பணியிடங்கள்- சம்பளம் ரூ. 35,000!
IBPS Job Apply Last Date 2025
IBPS Job Apply Last Date 2025: வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Regional Rural Banks) காலியாக உள்ள 13,217 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS)
- பணியிடங்கள்: 13,217
- வகை: வங்கி வேலை
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்
1. அலுவலக உதவியாளர் (Office Assistant – Multipurpose)
- காலியிடங்கள்: 7,972
- சம்பளம்: ₹35,000 (தோராயமாக)
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம்.
- வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை.
2. அதிகாரி நிலை-I (Officer Scale-I – Assistant Manager)
- காலியிடங்கள்: 3,907
- சம்பளம்: ₹60,000 (தோராயமாக)
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம். விவசாயம், தோட்டக்கலை, வனவியல், கால்நடை அறிவியல், மேலாண்மை போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.
3. அதிகாரி நிலை-II (Officer Scale-II – Manager)
- காலியிடங்கள்: 1,139
- சம்பளம்: ₹75,000 (தோராயமாக)
- கல்வித் தகுதி: தொடர்புடைய துறையில் பட்டம், CA, MBA, சட்டம்.
- வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை.
4. அதிகாரி நிலை-III (Officer Scale-III – Senior Manager)
- காலியிடங்கள்: 199
- சம்பளம்: ₹80,000 (தோராயமாக)
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம். வங்கி, நிதி, சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.
தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள்
- வயது தளர்வு: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
- விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD பிரிவினர்: ₹175
- மற்றவர்கள்: ₹850
- தேர்வு முறை:
- அலுவலக உதவியாளர்: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மைத் தேர்வு (Mains Exam).
- அதிகாரி நிலை-I: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் (Interview).
- அதிகாரி நிலை-II & III: ஒற்றை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |