கிராமப்புற வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு-13217 காலிப் பணியிடங்கள் – அப்ளை செய்யும் முழு விவரம்!
IBPS RRB Recruitment 2025 Apply Immediately
IBPS RRB Recruitment 2025 Apply Immediately: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) பல்வேறு பதவிகளில் 13,217 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்களின் விவரம்:
கல்வித் தகுதிகள்
- அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியைப் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
- பிற அதிகாரப் பணியிடங்கள்: அந்தந்தப் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.09.2025 நிலவரப்படி)
- அலுவலக உதவியாளர்: 18 முதல் 28 வயதுக்குள்
- துணை மேலாளர்: 18 முதல் 30 வயதுக்குள்
- பிற அதிகாரிகள்: 21 முதல் 32 வயதுக்குள்
- வயதுச் சலுகை: SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உண்டு.
தேர்வு முறை
அனைத்துத் தேர்வுகளும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்தப்படும்.
- அலுவலக உதவியாளர்: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு. நேர்காணல் கிடையாது.
- துணை மேலாளர்: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
- பிற அதிகாரிகள்: ஒற்றை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் முக்கியத் தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: செப்டம்பர் 1
- விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 21
- விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.ibps.in/
விண்ணப்பக் கட்டணம்
- பொது / OBC / EWS: ₹850
- SC / ST / மாற்றுத்திறனாளி / முன்னாள் ராணுவத்தினர்: ₹175
மேலும் விரிவான தகவல்களைப் பெற, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்வையிடவும்.