இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு! IOCL Recruitment 2026 Apply Online

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு!

IOCL Recruitment 2026 Apply Online

IOCL Recruitment 2026 Apply Online: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), தற்போது நாடு முழுவதும் காலியாக உள்ள 394 Non-Executive பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மத்திய அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

IOCL Recruitment 2026 Apply Online
IOCL Recruitment 2026 Apply Online

பணிகள் மற்றும் ஊதிய விவரம்

இந்த அறிவிப்பின் மூலம் Junior Engineering Assistant-IV மற்றும் Junior Quality Control Analyst ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

கல்வி மற்றும் வயதுத் தகுதி

விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ (Diploma) அல்லது பி.எஸ்சி (B.Sc) பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம். இருப்பினும், அரசு விதிமுறைப்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மற்ற பிரிவினர் ரூ.300-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் முதலில் கணினி வழித் தேர்வு (Computer Based Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் திறன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு (SPPT) நடத்தப்படும்.

முக்கிய தேதிகள்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிசம்பர் 20, 2025 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 09, 2026 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள நபர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகவல்களையும் ஒருமுறை முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment