₹2,000 மகளிருக்கான உரிமைத் தொகை.. வெளியானது முக்கியத் தகவல்!
Kalaignar Magalir Urimai Thogai Increased 2000
Kalaignar Magalir Urimai Thogai Increased 2000 : மகளிருக்கான உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, நிதித்துறையிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றால், மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அரசும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிகிறது. நிதித்துறையின் சாதகமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://kmut.tn.gov.in/
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஏராளமான பெண்களுக்குக் கூடுதல் நிதி உதவி கிடைக்கும்.