கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 புதிதாக விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிப்பு?-முக்கிய அப்டேட்!
Kalaignar Magalir Urimai Thogai New Application Rejected Update News Sep 25
Kalaignar Magalir Urimai Thogai New Application Rejected Update News Sep 25 : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்காகப் புதிதாக விண்ணப்பித்த பலருக்கு, தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. எனவே, விண்ணப்பித்த அனைவருமே தகுதியானவர்கள் என்று கருத முடியாது.
புதிதாக விண்ணப்பித்தவர்களில், யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சில முக்கிய காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள்
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில தகுதி நிபந்தனைகள் உள்ளன. அவை பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- அரசு ஊழியர்கள்: விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் அரசு ஊழியராக இருந்தால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இது புதிதாக அரசுப் பணி பெற்றவர்களுக்கும் பொருந்தும்.
- வருமான வரி செலுத்துவோர்: குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்தி வந்தால், அவர்கள் இந்த திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
- தொழில் வரி செலுத்துவோர்: குடும்பத்தில் யாரேனும் தொழில் வரி செலுத்துபவராக இருந்தால், அவர்களது விண்ணப்பமும் நிராகரிக்கப்படும்.
- நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர்: கார், ஜீப் அல்லது வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவை.
- அதிக மின்சார நுகர்வு: ஒரு மாதத்திற்குச் சராசரியாக 300 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்குத் தகுதியற்றவை.
- அதிக நிலம் வைத்திருப்போர்: 10 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களும் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவை.
- அரசு ஓய்வூதியம் பெறுவோர்: குடும்பத்தில் யாரேனும் அரசு ஓய்வூதியம் பெற்று வந்தால், அவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள்.
- சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பயனடைவோர்: ஒரு குடும்ப உறுப்பினர் ஏற்கனவே வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்தால், இந்த திட்டத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம்.
தகுதியற்றோர் குறித்து புகார் அளிப்பது எப்படி?
மேலே குறிப்பிட்ட தகுதிகள் இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். இது, தகுதியான பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை சென்று சேர்வதை உறுதிசெய்ய உதவும்.
மேலே குறிப்பிட்ட காரணங்களில் ஏதேனும் ஒன்று உங்கள் குடும்பத்திற்குப் பொருந்தினால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அரசாங்கத்தின் அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை
அதேபோல், தகுதியில்லாதவர்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வெப்சைட்டில் சென்று அந்த பயனாளி குறித்தும் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.