கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தனியாக வசிக்கும் பெண்களுக்கான விதிமுறைகள்! Magalir Urimai Thogai Scheme Rules for Women Living Alone

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தனியாக வசிக்கும் பெண்களுக்கான விதிமுறைகள்!

Magalir Urimai Thogai Scheme Rules for Women Living Alone

Magalir Urimai Thogai Scheme Rules for Women Living Alone: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ₹1,000 தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெறுகின்றனர்.

Magalir Urimai Thogai Scheme Rules for Women Living Alone

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

தனியாக வசிக்கும் பெண்களுக்கான வாய்ப்பு

  • தனியாக வசிக்கும் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
  • ஆனால், அவர்கள் விண்ணப்பிக்க ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி.

ரேஷன் கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்

  • தனியாக வசிக்கும் பெண் இதுவரை ரேஷன் கார்டு பெறவில்லை என்றால், “தனியாக வசிக்கிறேன்” என்பதற்கான மனுவைச் சமர்ப்பித்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரிகளிடம் குறைதீர் முகாம்களில் நேரடியாகச் சென்றும் முறையிடலாம்.

Magalir Urimai Thogai Scheme Rules for Women Living Alone

யார் புதிதாக விண்ணப்பிக்கலாம்?

ஏற்கனவே பயனாளிகள் பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்டவர்கள் அல்லது புதிதாகத் தகுதி பெற்றவர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம்.

  • கடந்த முறை திட்டத்தில் சேர்க்கப்படாமல் விடுபட்டவர்கள்.
  • அனைத்துத் தகுதிகளும் இருந்தும் புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள்.
  • அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்குக் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்பத்தில், ஓய்வூதியம் பெறுபவரைத் தவிர மற்ற தகுதியான பெண்கள்.
  • பிற ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பத்தில், ஓய்வூதியம் பெறுபவரைத் தவிர மற்ற தகுதியான பெண்கள்.
  • அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகள் தளர்வுகளின்படி, புதிதாக தகுதி பெற்றிருப்பவர்கள்.

Leave a Comment