மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 குறித்து உதயநிதி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Magalir Urimai Thogai Udhaya nithi New Announcement
Magalir Urimai Thogai Udhaya nithi New Announcement : தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், லட்சக்கணக்கான பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் விரைவில் பயன்பெறுவார்கள் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக்கிய தகவல்கள்:
- கூடுதலாக இணைக்கப்பட்ட பயனாளிகள்: மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத 9 லட்சம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களும் விரைவில் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.
- விடுபட்டோருக்கு ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
- “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்: இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 40% மகளீர் உரிமைத் தொகை குறித்த விண்ணப்பங்களே. இது இத்திட்டத்தின் மக்கள் வரவேற்பைக் காட்டுகிறது.
- பொருளாதார வளர்ச்சி: மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் போன்ற திட்டங்கள், பெண்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்வதோடு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் 11.19% ஆக உயர்த்தியுள்ளன.
திமுக அரசின் மற்ற சமூக நலத் திட்டங்கள்
- விடியல் பயணம்: இத்திட்டத்தின் கீழ் இதுவரை பெண்கள் 730 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
- சுயமரியாதை திருமணங்கள்: திராவிட இயக்கத்தின் முயற்சியால் சுயமரியாதைத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டு, சமூக நீதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அறநிலையத்துறை நிதி: இந்து சமய அறநிலையத்துறை நிதியைக் கொண்டு ஏழை மக்களுக்கு உயர்கல்வி வழங்குதல், இலவச திருமணங்கள் நடத்துதல் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டங்கள் அனைத்தும், திராவிட மாடல் அரசின் சமூகநீதி மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.