இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது – விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள்! Pattinathar Kovil TNHRCE Recruitment 2025 Apply Link

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது -விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகள்!

Pattinathar Kovil TNHRCE Recruitment 2025 Apply Link

Pattinathar Kovil TNHRCE Recruitment 2025 Apply Link: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் (திருவொற்றியூர், சென்னை) நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு இது. இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Pattinathar Kovil TNHRCE Recruitment 2025 Apply Link

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
நிறுவனம்அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்
பணியிட வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்04
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி25.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி25.10.2025 (மாலை 5.45 மணி வரை)
தேர்வு முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை

காலியிடங்கள் மற்றும் கல்வித் தகுதிகள்

பதவிகாலியிடங்கள்சம்பளம் (மாதம்)கல்வித் தகுதி
1. அலுவலக உதவியாளர்01₹12,600 – ₹39,900 வரைஎட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சுயம்பாகி01₹13,200 – ₹41,800 வரைதமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும். திருக்கோயிலின் பழக்க வழக்கத்திற்கேற்ப நெய்வேத்தியம்/பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
3. காவலர்01₹10,000 (சமபள விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதி செய்யவும்)தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. தோட்டவேலை01₹11,600 – ₹36,800 வரைதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் தேர்வு முறை

  • வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  1. விண்ணப்ப படிவத்தை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கொடுக்கப்பட்ட இணைப்புகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் (கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கான ஆவணம் போன்றவை) இணைத்து, கடைசித் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டினத்தாரர் திருக்கோயில், அலுவலக இருப்பு:- அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர் சென்னை-19.

கடைசி தேதிக்குப்பின் (25.10.2025 மாலை 5.45 மணி) வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

முக்கியக் குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment