தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் அறிவிப்பு!  Pongal Gift 3000 Rupees CM Announcement

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் அறிவிப்பு! 

Pongal Gift 3000 Rupees CM Announcement

Pongal Gift 3000 Rupees CM Announcement : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த சில நாட்களாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கு மிக உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Pongal Gift 3000 Rupees CM Announcement

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய அறிவிப்புகள்:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகுப்பில் இடம் பெறுபவை:

  • ரொக்கப் பணம்: ரூ.3,000 (நேரடியாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்).

  • பொருட்கள்: 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு.

  • உடைகள்: தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை.

யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் மூலம் சுமார் 2,22,91,710 குடும்பங்கள் பயன்பெற உள்ளன.

  1. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்.

  2. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்.

குறிப்பு: சர்க்கரை அட்டை மற்றும் பொருட்கள் இல்லா (No Commodity) அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த ரொக்கப் பணம் வழங்கப்படமாட்டாது.

Leave a Comment