பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு 2026- மகிழ்ச்சியில் பொதுமக்கள்!-எப்போது விநியோகம்?
Pongal Parisu Thoguppu 2026 Puducherry: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 750 மதிப்புள்ள ஐந்து வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.எனவே இந்த மகிழ்ச்சியான செய்தியை குறித்து முழு தகவலையும் கீழ்கண்ட பதிவில் காணலாம்.

புதுச்சேரி அரசு விரைவில் வழங்க உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹750 மதிப்புள்ள ஐந்து வகையான பொருட்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து பொருட்கள்: பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசி பருப்பு, நெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ஆகியவை ஆகும். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.