கனமழை எச்சரிக்கை!- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு? Rain Alert Tomorrow School Leave Update Oct 22

Rain Alert Tomorrow School Leave Update Oct 22

Rain Alert Tomorrow School Leave Update Oct 22:நாளை மழை தீவிரத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி உள்ள விவரங்கள்:

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

மழையின் தீவிரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.

 

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

 

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்கள் மிக கனமழைக்கான மிக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது 

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்த பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை.

ஆனால், மழையின் தீவிரத்தைப் பொறுத்து மாலையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக அதிகப்படியான வாய்ப்புள்ளது.

 

சுருக்கமாக, ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் செய்தி வெளியாகும் வரை எந்த அறிவிப்பும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்.

Leave a Comment