ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய நியூஸ் -அமைச்சர் சொன்ன குட் நியூஸ் என்ன தெரியுமா?
Ration Card Type Change To Apply Ungaludan Stalin Scheme
Ration Card Type Change To Apply Ungaludan Stalin Scheme: தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் குடும்ப அட்டையின் வகையை, தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அட்டை வகைகள்
தற்போது தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. மாநில அரசின் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, இந்த அட்டைகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- அந்தியோதயா அன்ன யோஜனா (AAY): மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான அட்டை.
- முன்னுரிமை குடும்ப அட்டை (PHH): ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் மானிய விலையில் பெற முடியும்.
- முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH): குறைந்த அளவிலான சலுகைகளைப் பெறுவார்கள்.
- சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S): சர்க்கரையை மட்டும் மானிய விலையில் பெறும் அட்டை.
- பொருளில்லா அட்டை (NPHH-NC): எந்தப் பொருளையும் பெற முடியாத அட்டை.
ஏன் குடும்ப அட்டை வகையை மாற்ற வேண்டும்?
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்கள், தங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும் வகையில் தங்கள் குடும்ப அட்டையை முன்னுரிமை குடும்ப அட்டையாக (PHH) மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம்.
இதனால், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் மானிய விலையில் பெற முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
அரசு அறிவிப்பின்படி, தகுதியானவர்கள் தங்கள் குடும்ப அட்டை வகையை மாற்ற விரும்பினால், தேவையான ஆவணங்களுடன் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” போன்ற சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.