செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை-எத்தனை நாட்கள் தெரியுமா? முழு விவரம்!
September Month Holidays List 2025
September Month Holidays List 2025: செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பண்டிகைகள்:
- ஓணம்: செப்டம்பர் 4 மற்றும் 5 (வியாழன், வெள்ளி) – கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையையொட்டி சில மாநிலங்களில் விடுமுறை இருக்கலாம்.
- மீலாடி நபி: செப்டம்பர் 5 (வெள்ளி) – முகமது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விழா. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- நவராத்திரி ஸ்தாபனம்: செப்டம்பர் 22 – இந்த நாளிலிருந்து நவராத்திரி தொடங்கும். பல மாநிலங்களில் இந்த நாளையொட்டி விடுமுறை இருக்கலாம்.
- துர்கா பூஜை: செப்டம்பர் 29-30 – செப்டம்பர் கடைசி வாரத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளம், உ.பி., பீகார், திரிபுரா மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம்.
-
செப்டம்பரில் காலாண்டு விடுமுறை
இதனையடுத்து செப்டம்பர் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு கொண்டாட்டமான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது. அதிலும் காலாண்டு தேர்வு விடுமுறையானது செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் குஷியாக உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
அனைத்து மாநிலங்களிலும் பள்ளி விடுமுறைகள் ஒரே மாதிரியாக இருக்காது. அவை உள்ளூர் மரபுகள், கல்வி வாரியங்கள் மற்றும் பள்ளியின் கொள்கைகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, விடுமுறை குறித்த சரியான தகவல்களுக்கு உங்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வ விடுமுறை அட்டவணையைப் பார்க்க வேண்டும்.