நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- சம்பளம் ரூ.67,700- விண்ணப்பிக்கும் முழு விவரம்! Supreme Court Job Recruitment 2025

நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- சம்பளம் ரூ.67,700- விண்ணப்பிக்கும் முழு விவரம்!

Supreme Court Job Recruitment 2025

Supreme Court Job Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கோர்ட் மாஸ்டர் (Court Master) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 67,700 முதல் சம்பளம் வழங்கப்படும்.

Supreme Court Job Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

பணி விவரங்கள்

  • பணியின் பெயர்: கோர்ட் மாஸ்டர்
  • மொத்த காலியிடங்கள்: 30
  • சம்பளம்: மாதம் ரூ. 67,700 முதல்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 15, 2025
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி மற்றும் இதர தகுதிகள்

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • தட்டச்சு திறன்: நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
  • சுருக்கெழுத்து திறன் (Short-hand): நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அனுபவம்: தனிச் செயலர் (Personal Secretary), சீனியர் பெர்சனல் அசிஸ்டண்ட், பெர்சனல் அசிஸ்டண்ட் அல்லது சீனியர் ஸ்டெனோகிராபர் ஆக அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயது. அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்

  • தேர்வு முறை: சுருக்கெழுத்துத் தேர்வு (ஆங்கிலம்), கொள்குறி வகை எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு ரூ. 750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இணையதளமான **https://www.sci.gov.in/**-ஐப் பார்வையிடலாம்.

Leave a Comment