மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது சீக்கிரமா விண்ணப்பிங்க!
Thoothukudi Government Hospital Recruitment 2025
Thoothukudi Government Hospital Recruitment 2025: தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் 22 தற்காலிகப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணியிட விவரங்கள்
வயது வரம்பு மற்றும் தளர்வுகள் (01.07.2025 நிலவரப்படி)
- பொதுப் பிரிவு: 18 வயது முதல் 32 வயது வரை. (Multi Task Worker பணிக்கு மட்டும் 18 முதல் 40 வயது வரை)
- BC, MBC, DNC பிரிவினர்: அதிகபட்சம் 34 வயது வரை.
- SC, ST பிரிவினர்: அதிகபட்சம் 37 வயது வரை.
தேர்வு முறை
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் மட்டுமே நிரந்தரமில்லாத (தற்காலிக) நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பிலிருந்து (PDF) விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
- விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அறிவிப்பில் உள்ள காலக்கெடுவுக்குள், கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் நலப்பணிகள், 166, வடக்கு கடற்கரை சாலை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி – 628001.
Application – Link
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 02.10.2025
மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.thoothukudi-health-17582931639605-2025-10-02-14-17-20 (1)