தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2025-1096 பணியிடங்கள்!
TN DWDA Rights Project Jobs 2025
அட்டவணை: இன்று கடைசி தேதி!
TN DWDA Rights Project Jobs 2025: மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (Directorate of Welfare of Differently Abled – DWDA) கீழ் செயல்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் (TN Rights Project) காலியாக உள்ள 1096 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: 14.10.2025
பணி நியமனம் குறித்த முக்கிய விவரங்கள் (Job Summary)
தேர்வு செய்யும் முறை (Selection Process)
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- குறுகிய பட்டியல் (Shortlisting): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- ஆவணச் சரிபார்ப்பு (Document Verification): தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அசல் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய இணைப்புகள்
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள், கடைசித் தேதிக்குள் (14.10.2025) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.