ஏழை குடும்பங்களுக்கும் 3 சென்ட் இலவச நிலம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
TN Free Patta Scheme 2025
TN Free Patta Scheme 2025 : தமிழக மக்களின் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பல லட்சக்கணக்கான குடும்பங்களின் சொந்த வீடு கனவை நனவாக்கி உள்ளது.
நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கே சட்டப்பூர்வ உரிமை வழங்கும் இந்தத் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
TN Free Patta Scheme திட்டத்தின் நோக்கம்
2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், இதுவரை 4.37 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு அவர்களின் குடியிருப்புக்கான சட்டப்பூர்வ உரிமை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சென்னை மற்றும் பிற மாநகரங்களில் உள்ள Belt Area-க்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
யார் யாருக்கு தகுதியுண்டு?
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக எந்தவித ஆட்சேபணையும் இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- சில இடங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நிலத்தின் அளவு
தகுதியுடைய பயனாளிகளுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து நிலத்தின் அளவு மாறுபடும்.
- அதிகபட்சமாக 3 சென்ட் வரை நிலம் வழங்கப்படும்.
- கிராமப்புறங்களில்: பொதுவாக 2 முதல் 2.5 சென்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது.
- நகர்ப்புறங்களில்: பொதுவாக 1.25 முதல் 1.5 சென்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது.
யார் யாருக்கு பட்டா வழங்கப்படாது?
அனைத்து அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்பட மாட்டாது. பின்வரும் ஆட்சேபகரமான இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா கிடைக்காது:
- நீர்நிலைகளான ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் வசிப்பவர்கள்.
- கோயில் நிலத்தில் வசிப்பவர்கள்.
- நீர்ப்பாசன கால்வாய் பகுதியில் வசிப்பவர்கள்.
இருப்பினும், இவர்களுக்கு அரசு மாற்று இடங்களில் பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துத் தருகிறது.