தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!- மாதம் ரூ. 35,400 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!
TN MRB Radiographer Recruitment 2025
TN MRB Radiographer Recruitment 2025: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB), தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள ரேடியோகிராபர் (Radiographer) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணி விவரங்கள்
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 67 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,30,400 வரை (Pay Level 11) ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தால் (DME) நடத்தப்படும் Diploma in Radio Diagnosis Technology (இரண்டு வருட படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
அல்லது, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Sc., (Radiography and Imaging Technology) அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவினர் (OC): 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
BC, BCM, MBC/DNC, SC, SCA, ST: இந்தப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம்
SC / SCA / ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (DAP): ரூ. 300/-
இதர பிரிவினர்: ரூ. 600/-
தேர்வு முறை
இப்பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்விப் படிப்புகளில் (10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ/பட்டப்படிப்பு) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் (Merit List) தயார் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியத் தேதிகள்
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 15.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.01.2026
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் TN MRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது கல்விச் சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் கையொப்பம் ஆகியவற்றைச் சரியான அளவில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் உள்ள அனைத்துத் தகவல்களையும் ஒருமுறை கவனமாகப் படித்து உறுதி செய்துகொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |