தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்! -தேர்வு கிடையாது ரூ.18,500 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
TNHRCE Recruitment 2025 Thiruthani Murugan
TNHRCE Recruitment 2025 Thiruthani Murugan: அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் காலியாக உள்ள மொத்தம் 26 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைகளுக்கு நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

💼 பதவி வாரியான விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி
📝 வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 05.11.2025-க்குள் அனுப்ப வேண்டும்:
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை – 631 209, திருவள்ளூர் மாவட்டம்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.