தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தண்டு மாரியம்மன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
TNHRCE Thandu Mariyamman Kovil Recruitment 2026
TNHRCE Thandu Mariyamman Kovil Recruitment 2026: இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற ஓதுவார் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்து மதத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதி சம்பளம் காலி இடங்களினுடைய எண்ணிக்கை தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
- இப்பணியின் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 02.
- இந்து சமய அறநிலை துறையைச் சார்ந்த வேலை.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 24/12/2025
- விண்ணப்பிக்கும் கடைசி தேதி 24/01/2026
1. பதவி: ஓதுவார்
சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாட பிரிவை முடித்ததற்கான தேவார பள்ளி வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: இரவு காவலர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |