தமிழ்நாடு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு வழிமுறைகள் இதோ!
TNRD Recruitment 2025 Apply Online
TNRD Recruitment 2025 Apply Online: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள், 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் விவரம்
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பதவி வாரியான தகுதிகள் மற்றும் சம்பளம்
-
ஈப்பு ஓட்டுநர்
- சம்பளம்: மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை.
- கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் முன் அனுபவம்.
- வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 – 32 வயது, பி.சி / எம்.பி.சி பிரிவினருக்கு 34 வயது மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 42 வயது வரை.
-
அலுவலக உதவியாளர்
-
சம்பளம்: மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை.
-
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
-
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 – 32 வயது, பி.சி / எம்.பி.சி பிரிவினருக்கு 34 வயது மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 37 வயது வரை.
-
-
பதிவறை எழுத்தர்
- சம்பளம்: மாதம் ₹15,900 முதல் ₹50,400 வரை.
- கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
- வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 – 32 வயது, பி.சி / எம்.பி.சி பிரிவினருக்கு 34 வயது மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 37 வயது வரை.
-
இரவு காவலர்
- சம்பளம்: மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை.
- கல்வித் தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18 – 32 வயது, பி.சி / எம்.பி.சி பிரிவினருக்கு 34 வயது மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 37 வயது வரை.
முக்கியத் தகவல்கள்
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ₹100 மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ₹50.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025
- விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.tnrd.tn.gov.in/
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைச் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
Official Notification- Click Here
ஈப்பு ஓட்டுநர்-Apply Link
அலுவலக உதவியாளர்–Apply Link
பதிவறை எழுத்தர்-Apply Link
இரவு காவலர்–Apply Link