ஊரக வளர்ச்சித் துறையில் 375 அரசுப் பணியிடங்கள்: இப்போதே விண்ணப்பியுங்கள்!
TNRD Recruitment 2025 Vacancy 375
TNRD Recruitment 2025 Vacancy 375 : தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 375 எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதிகள்
வயது வரம்பு
- பொதுப் பிரிவு: 18 முதல் 32 வயது வரை
- பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: 18 முதல் 34 வயது வரை
- ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்: 18 முதல் 37 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்
- ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ₹50
- மற்ற பிரிவினர்: ₹100
தேர்வு மற்றும் முக்கிய தேதிகள்
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 01.09.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.09.2025
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrd.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.